ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்பதால் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்ததாக,
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும்இ யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்இ வடக்கில் உள்ள பிரச்சினைகள் தெற்கில் உள்ள பிரச்சினைகளை விட வித்தியாசமானவை.
இதன்போதுஇ ஒவ்வொரு மாகாணத்திலும் பிராந்திய சபைகளை ஸ்தாபிக்குமாறு குணவர்தனவிடம் யோசனை தெரிவித்துள்ளோம்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபையில் அங்கம் வகிக்க எமக்கு சம்மதமில்லை.