திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.
அந்த அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் திரிபோஷாவின் தரம் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, உரிய குறியீட்டின்படி உற்பத்தி செய்யப்படும் திரிபோஷா சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர்