More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இரு பேருந்துகள் மோதி விபத்து.
இரு பேருந்துகள் மோதி விபத்து.
Sep 26
இரு பேருந்துகள் மோதி விபத்து.

ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் பாடசாலை பேருந்து ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.



பாணந்துறையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஹொரண குருகொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்ற பேருந்து, இலிபா பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



ஆடைத் தொழிற்சாலையின் பேருந்து, பாடசாலையருகே நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்தின் பின்புறம் மோதியதையடுத்து பாடசாலை பேருந்து சுமார் நூறு மீற்றர் முன்னோக்கிச் சென்று மின் கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



காயமடைந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அம்புலன்ஸ் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.



அப்போது  பாடசாலை பேருந்தில் மாணவர்கள் இல்லை என்றும் மாணவர்கள் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.



மேலும் இதன்போது ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் சுமார் நாற்பது ஊழியர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



ஆடை தொழிற்சாலையின் பேருந்து சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.



மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை

Jul24

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்

May30

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு

Apr26

நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த

Oct08

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ

Jul05

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று

Sep06

 இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச

Sep29

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Sep20

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள

Mar16

தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்

Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

Feb21

கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்

Jun15

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ

Feb02

நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ

Mar13

முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந