More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன!
உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன!
Sep 26
உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு புதிதல்ல -கமல் குணரத்ன!

போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.



அத்தோடு உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பாதுகாப்பு அமைச்சின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.



இதன்போது மேலும் தெரிவித்த அவர்  'எந்த பிரச்சனையும் இல்லை. போராட்டங்கள் நடத்தலாம். கூட்டங்கள் நடத்தலாம். ஆனால் சட்ட முறைப்படி அந்த கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.



ஒரு கிராமத்தில்கூட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அந்தந்த பொலிஸ் நிலையங்களில் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.



அன்றாட வாழ்க்கையை துன்பகரமானதாக மாற்றும் விடயங்களை எல்லோரும் விரும்புவதில்லை. எனவே அதையெல்லாம் பரிசீலித்து பொலிஸார் அந்த அனுமதியை வழங்குகின்றனர்.



திடீர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது. தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகள் தயாராக உள்ளன.



உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு நேற்று அறிமுகம் செய்யப்படவில்லை. காலங்காலமாக வரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் விடயங்கள் இவை.



கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அங்கு தங்கள் பணிகளைச் செய்ய முடியவில்லை.



அவ்வாறான இடையூறுகள் ஏற்பட்டால் அவ்வாறான இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முந்தைய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.



அதனால்தான் கொழும்பின் பெருநகரில் சில இடங்களை மட்டும் உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி உத்தரவின் மூலம் நியமித்துள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar04

இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ

Oct25

கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற

Jun20

இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ

Jul08

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட

May10

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர

Sep27

கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்

Feb21

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ

Jan25

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா

Sep16

கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு

Mar30

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Jun15

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா

Feb07

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&

Jan22

சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்

Aug06

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு