More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வீட்டு உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்
வீட்டு உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்
Sep 25
வீட்டு உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து



பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.



இதன்போது 17​ பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்​ கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



திருவையாறு பகுதிய சேர்ந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவரது வீட்டிற்கு நுழைந்த திருடர்கள், வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன், மனைவி இருவரையும் தாக்கியதுடன் கை , கால் என்பவற்றைக் கட்டி விட்டு பணம் நகை எங்கே உள்ளது என வினவியுள்ளனர்.



இதன்போது மனைவி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் கையில் இருந்த காப்பையும் கழட்டி கொடுத்தபோது தாலிக்கொடி எங்கே எனக்கேட்டு மீண்டும் இருவரையும் தாக்கியுள்ளனர்.



இவ்வாறு கொள்ளையிட்டவர்கள் தப்பிச் சென்ற போது கைத்தொலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இனையடுத்து வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில்​ கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb19

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப

Jul26

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த

May22

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி

Oct24

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Mar05

ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ

Oct16

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய

Feb02

 பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற

Mar07

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு

May03

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை

Sep29

மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை

Aug09

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை

Feb02

இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற

Mar09

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை

Sep18

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி