பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத்தயாராக இருப்பதாக கூறியதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
'நீதிமன்றம் விரும்பினால் நான் பெண் நீதிபதியிடம் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்பேன். நீதிமன்றம் அல்லது நீதித்துறையின் உணர்வுகளைப் புண்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் கூறமாட்டேன் 'என்று கான் இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
'எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டேன்' என்று நான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கிறேன்' என்று அவர் கூறியுள்ளார்.
'நான் ஒரு சிவப்பு கோட்டைத் தாண்டியிருந்தால் மன்னிக்க வேண்டும். ஆகஸ்ட் 20 அன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு பொது பேரணியில் உரையாற்றதைத் தொடர்ந்து கான் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
தனது உயர் உதவியாளர் ஷாபாஸ் கில்லைக் கைது செய்ததற்காக நீதிபதி ஜெபா சவுத்ரியின் நடவடிக்கையை கான் கண்டித்திருந்தார்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தானின் சட்டங்களின்படி இம்ரான் கான் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பொதுப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.