இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியிலேயே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை இலக்காக கொண்டு, அதனை எவ்வித விக்கெட் இழப்புக்களுமின்றி முறியடித்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
கராச்சி மைதானத்தில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களுகளை பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து, 200 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 பந்துகளுக்கு 203 ஓட்டங்களை பெற்று வெற்றி ஈட்டியது.
இந்நிலையில் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையை இந்த அணிகள் பெற்றுள்ளன.