More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஈரானில் அமைதியின்மை: 31 பொது மக்கள் உயிரிழப்பு- அமெரிக்கா பொருளாதாரத் தடை!
ஈரானில் அமைதியின்மை: 31 பொது மக்கள் உயிரிழப்பு- அமெரிக்கா பொருளாதாரத் தடை!
Sep 23
ஈரானில் அமைதியின்மை: 31 பொது மக்கள் உயிரிழப்பு- அமெரிக்கா பொருளாதாரத் தடை!

ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள அமைதியின்மையால் குறைந்தது 31 பொது மக்கள் உயிரிழந்திருப்பதாக மனித உரிமை குழுவொன்று தெரிவித்துள்ளது.



ஆனால் இந்த எண்ணிக்கையை மறுத்துள்ள அரசாங்கம் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.



எட்டாவது நாளாக தொடரும் இந்த போராட்டங்கள் 80 பெருநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு பரவியுள்ளன.



வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி, தெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது  தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமுலாக்கும் பொலிஸ்துறையால் கைதுசெய்யப்பட்டார்.



பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமினியின் தலையில் பொலிஸ்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும் பொலிஸ்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.



தாக்குதலுக்கு பிறகு 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு மாசா அமினி கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.



இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பொலிஸ்துறையினர் அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.



பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.



இதனிடையே  கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், இராணுவத்தின் தரைப்படைகள், பாசிஜ் எதிர்ப்புப் படைகள் மற்றும் பிற சட்ட அமுலாக்க முகமைகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.



இது அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை அணுக மறுக்கிறது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள

Jul03

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ

Sep16

வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ

Feb27

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ

Oct11

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா

Mar08

பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.

Mar08

கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற

Aug04

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்க

Aug21

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17

Jun14

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிற

Feb07

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்

May18

காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத

Sep05

இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை

Mar25

ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை

Jun07

ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர