More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே!
விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே!
Sep 22
விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே!

இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது தான் ​​விபசாரத்தை குறிப்பிடவில்லை என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரவு வாழ்க்கை விபசாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார்.



நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது கலாசாரம் மற்றும் மதம் பற்றி பேசுபவர்கள் இலங்கையை எவ்வித அபிவிருத்தியும் இன்றி தேக்கமடையச் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.



இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ள அவர் 'நாட்டை முன்னேற்ற முயற்சி எடுக்கும்போது சிலர் கலாசாரம் மற்றும் மதம் பற்றி பேசத் தொடங்குகிறார்கள். துறவிகள்கூட என்னை விமர்சித்துள்ளனர். மதம் பற்றி பேசி என்னை விமர்சிப்பவர்கள் பௌத்தம் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.



மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். நான் இந்த முன்மொழிவை முன்பே செய்துள்ளேன். மீண்டும் ஒரு முறை முன்மொழிய விரும்புகிறேன்.



மதுக்கடைகளை முன்கூட்டியே மூடும் போது பின்வாசல் வழியாக அனுமதியின்றி விற்பனை நடக்கிறது. இதுபோன்ற விற்பனை மூலம் அரசு வரி வசூலிக்க முடியாது. அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பீர் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும் நான் முன்மொழிகிறேன். ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இரவில் சிறிது மதுபானம் வாங்க முடியும்.



கஞ்சா தோட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் நான் முன்மொழிந்தேன்.  அது மக்கள் சாலையோரத்தில் கஞ்சா எடுப்பதை அங்கீகரிக்க வேண்டுமென நான் கூறவில்லை. கஞ்சாவை ஆயுர்வேத மருந்தாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து' என அவர் மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul04

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி

Oct18

எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்

Feb13

ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ

Jan19

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி

Jul30

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே

Jan26

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

சு

Aug03

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி

Feb27

இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம

Feb03

அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்

Jan12

தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி

Feb19

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க

May31

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்

Oct20

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி

Jan19

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’

May02

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது