More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது!
புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது!
Sep 22
புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது!

உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை வரவழைக்கும் ஜனாதிபதி விளாமிடிர் புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.



மொத்தம் 1300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய மனித உரிமைகள் குழுவான ஒவிடி- இன்போஃ தெரிவித்துள்ளது.



இர்குட்ஸ்க், பிற சைபீரிய நகரங்கள் மற்றும் யெகாடெரின்பர்க்கில் டசன் கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.



இதனிடையே விளாடிமிர் புடினின் அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வெளியேறும் விமானங்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன. மேலும் கூகிளில் 'ரஷ்யாவை விட்டு வெளியேறுவது எப்படி' என்ற தேடலம் உயர்ந்தது.



உக்ரைனில் சமீபத்திய போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்யாவின் படைகளை வலுப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி ஜனாதிபதி விளாமிடிர் புடின்இ சுமார் 300000 இராணுவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.



அத்துடன் புடின் ரஷ்ய பிரதேசத்தை பாதுகாக்க கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவேன் என்று வலியுறுத்தினார். இதில் அணுஆயுத தாக்குதல் எச்சரிக்கையும் அடங்கும்.



உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்புகளை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நி

Sep06

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

May04

போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில

Sep11

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Sep16

ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல

Jan18

ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப

Jun08

கனடாவில் முஸ்லிம் குட

Aug18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Aug24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jun08

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாரிய விரிசல்

May27

.

ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த

Apr21

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன

Nov21

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீ

May27

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி

May27

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த