More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உரப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் மட்டு.விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்!
உரப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் மட்டு.விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்!
Sep 22
உரப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் மட்டு.விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



கொழும்பில் இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.



உரப்பற்றாக்குறை காரணமாக நெற்நெய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.



அத்துடன் நெற்செய்கைக்கு தேவையான உரத்தினை அரசாங்கம் வழங்கும் வரையில் நெற்செய்கையில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.



இதுதொடர்பில் இதற்கு முன்னரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்இ இரா.சாணக்கியனை மட்டக்களப்பில் சந்தித்து பேசியிருந்தனர்.



இதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியினை சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றிருந்தமை காரணமாக அவரை சந்தித்து கலந்துரையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இந்தநிலையில் இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பங்கேற்கவுள்ளனர்.



குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு உர விவகாரத்துடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.



இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக கொழும்பிற்கு அவர்கள் வருகை தந்துள்ள நிலையிலேயே இன்றைய தினம் கொழும்பில் இந்த விடயம் தொடர்பில் இரா.சாணக்கியனை அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.



விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.



குறிப்பாக விவசாய அமைச்சர் தங்களிடம் தெரிவித்த கருத்துக்களில் தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



மழையினை நம்பி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும் 80 ஆயிரம் ஏக்கர் நீர்பாசனங்களையும் நம்பி தாங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.



இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இரா.சாணக்கியனின் பிறந்தநாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கேக் ஒன்றினையும் வெட்டியிருந்தனர்.



இதேவேளை இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும் மாலை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி

Jun27

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும்

Oct25

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற

Mar14

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்

Aug13

கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்

Jan23

நேற்று  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக

Mar08

“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத

Feb20

அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ

Apr03

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச

Apr27

வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற

Feb05

கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி

Jun01

சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர

Sep26

இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த

Sep27

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ

Feb24

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம