More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மூன்று அதிகாரிகள் மட்டுமே இணைந்திருந்தனர் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மூன்று அதிகாரிகள் மட்டுமே இணைந்திருந்தனர் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
Sep 21
ஜனாதிபதியின் தூதுக்குழுவில் மூன்று அதிகாரிகள் மட்டுமே இணைந்திருந்தனர் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் வைத்தியர் உட்பட மூன்று அதிகாரிகள் மட்டுமே உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் இணைந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.



இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.



முதல் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க தனது தனிப்பட்ட செலவில் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டார் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவான் விஜேவர்தனவும் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற புலம்பெயர் இலங்கையர் சந்திப்பில் கலந்துகொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் டினூக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் வைத்தியருமே இந்த பயணத்தில் கலந்துகொண்டனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul13

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத

Feb04

ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ

Feb23

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொ

Feb10

 கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா

Feb25

ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 க

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

Feb02

வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன

Feb06

தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ

Sep28

அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச

Feb06

இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை வி

Oct10

இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ

Sep21

18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை

Feb01

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு

Jan23

இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்

Jan13

பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து