More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்!
யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்!
Sep 21
யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று நேற்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது.



குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வைத்தியசாலையில் பல உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனை பொலிஸார், பெற்றோர் மற்றும் சமூகத்தில் உள்ளவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என போதன வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.



மேலும்இ பாடசாலை மாணவர்களிடையே குறித்த போதைப்பொருள் பாவனை அதிகம் காணப்படுவதால் பாடசாலை அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவர் தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



எதிர்வரும் காலங்களில் பாடசாலைகள் ஊடாக பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



போதைப்பொருளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு பல இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாலும் வைத்தியசாலையில் மருந்துக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாலும் இவ்வாறான போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படுபவர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதை விட போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு வேலை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr11

வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ

Sep14

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்

Mar27

மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ

Oct14

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான

Mar31

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள

Oct15

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க

Feb04

இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட

Jan24

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்

Jun29

அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப

Sep24

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட

Dec13

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள

Feb02

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி

Jan25

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு

Apr04

  நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க

Oct26

சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ