More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
Sep 20
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற நிலையில் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேர் இன்று காலை இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.



இவர்கள் அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.



தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.



தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; தங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.



பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep29

தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த

Jan29

உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து

Aug18

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த

Sep21

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக

Jul20

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமிய

Jan20

திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள

Mar01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்

Mar27

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

Sep30

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத

Aug17

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல

Mar12

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்

May08

இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து ஆ

Jan27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய

Jan26

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

சு