2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கையும் இடம்பெற்றுள்ளது
53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.