சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து நடந்த பகுதி கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும் கூறப்படுகிறது.