மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு 2000 பேர் பங்கேற்கும் மகாராணியின் இறுதிச் சடங்கு செப வழிபாடு ஆரம்பமானது.
வெஸ்ட்மின்ஸ்டர் டீன் டேவிட் ஹொய்ல் இந்த ஜெபக்கூட்டத்தை நடத்தினார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை பிரசங்கம் நிகழ்த்தினார்.
பிரதமர் லிஸ் டிரஸ் திருவிவிலிய வசனத்தை வாசித்தார்.
இறுதிச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் 'தி லாஸ்ட் போஸ்ட்' இசைக்கப்பட்டது.
பின்னர் இரண்டு நிமிட தேசிய அமைதி கடைபிடிக்கப்பட்டதுடன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.