கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன மக்கள் மருந்து உணவுப்பொருட்களை வழங்குமாறு மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது மூன்றாவது பதவிக்காலத்தினை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதால் முடக்கல் நிலை தொடராலம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்ற அதேவேளை அவரின் கடுமையான பூஜ்ஜிய கொவிட் கொள்கையின் பாதிப்பை எதிர்கொண்டுள்ள மக்கள் உணவு மருந்து பொருட்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மிகப்பெருமளவு மக்கள் தொடர்ச்சியான முடக்கல்நிலைக்குள் வைக்கப்பட்டுள்ளதால் சீனாவின் பல பகுதிகளில் உணவு மருத்துவ பராமரிப்பிற்கான வேண்டுகோள்கள் அதிகரித்து வருகின்றன.
சீனாவின் தேசிய கம்யுனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டிற்கு முன்னதாக இந்த நிலை காணப்படுகின்றது.
பொதுமக்கள் ஏதேச்சதிகார அரசாங்கத்தின் முடிவில்லாத கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் சீன மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்துள்ளதால் சீன முடக்கல் நிலை மக்கள் மீது பொருளாதார உளவியல் சுமைகளை சுமத்துகின்றது என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா முடக்கலின் பொருளாதார விளைவுகள் குறித்து சீன மக்கள் பரந்துபட்ட அளவில்குற்றச்சாட்டுகளையும் முறைப்பாடுகளையும் சுமத்திவருகின்றனர்.அவர்கள் தொழில்புரிய நிலையில் உள்ளதுடன் தங்கள் குறைந்துவரும் சேமிப்புகளை பயன்படுத்தி வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தளவானதாக காணப்படுகின்றதுஇஎனினும் கடுமையான முடக்கல்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன என வோசிங்டன் போஸ்ட் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் தென்மேற்கு குய்யாங் முடக்கப்பட்டது இந்த நகரின் பல பொதுமக்கள் உணவை பெறுவதற்காக தாங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஒன்லைன் மூலம் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் உணவுப்பொருட்கள் உட்பட பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய பல்பொருள் அங்காடிகளும் சிறிய கடைகளும் மூடப்பட்டுள்ளனஇ என ஒருவர் வெய்போவில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நியமித்த ஒன்லைன் விற்பனை தளங்களும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன உங்களால் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதியின் கடும் கொரோனா வைரஸ் கொள்கையின் கீழ் முக்கிய நகரங்களில் அரச அலுவலகங்கள் உணவகங்கள் பொதுகட்டிடங்களிற்குள் நுழைவதென்றால் நீங்கள் மூன்று நாளைக்கு முன்னர் கொரோனா சோதனை மேற்கொண்டு பாதிக்கப்படாதவராக காணப்படவேண்டும் என வோசிங்டன் போஸ்ட் தெரிவிக்கின்றது.
கடுமையான ஒரு வாரகால கொரோனா பெருந்தொற்று முடக்கல்நிலை காரணமாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட உணவு மருந்துகளை பெறுவதில் தட்டுப்பாடு போன்றவற்றினால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்கள் உதவிகளை கோரி வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் முதல் நகரின் 600000 மக்கள் தங்கள் வீடுகளிற்குள்ளேயே இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.மேலும் அருகில் உள்ள அதிகாரிகளை பொருள் விநியோகத்திற்கு நம்பியுள்ளனர்.
உணவு விநியோகம் என்பது சலிப்புதரும் அரிசிநான் நூடில்ஸ் என குறைவடைந்துவிட்டது என சில பொதுக்கள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவும் முடக்கலின் கீழ் உள்ளதுஇ500 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனாபெருந்தொற்று பரவ ஆரம்பித்தது முதல் 6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்இ 24806 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சில பகுதிகள் தீடிர் கொரோனா அதிகரிப்பு குறித்து அறிவித்துள்ளன கொரோனா வைரசின் ஐந்தாவது அலை பொதுமக்கள் ஏதேச்சதிகார அரசாங்கத்தின் முடிவில்லாத கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கடும் கட்டுப்பாடுகளின் மத்தியிலும் மீண்டும் மீண்டும் கொரோனா பரவுவது ஜி ஜின்பிங்கின் பூஜ்ஜியகொரோனா கொள்கையின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த பூஜ்ஜிய கொரோனா கொள்கை சீன மக்களின் நாளாந்த வாழக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.