More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங்.தீர்மானம்!
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங்.தீர்மானம்!
Sep 19
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங்.தீர்மானம்!

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும்  என ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் தலைவர் பதவி போட்டியில் அம்மாநில அசோக் கெலாட் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.



காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.



வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி தலைவர் பதவியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.



ஆனால் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.



ஏற்கனவே ராகுல்காந்தி தலைவர் பதவியை கடந்த 2 ஆண்டுக்கு முன் இராஜினாமா செய்த நிலையில் தற்போது வரை சோனியா காந்திதான் இடைக்கால தலைவராக தொடர்கிறார்.



தலைமை மீதான அதிருப்தியால் பல தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகிவிட்டனர். இந்த நிலையில் தற்போது புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளதால் ராகுல்காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.



அதேநேரம் ராகுல்காந்திக்கு கட்சிக்குள் எதிர்ப்பும் உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ராஜஸ்தான் காங்கிரஸ் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.



அம்மாநில முதல்வரும்  மூத்த தலைவருமான அசோக் கெலாட் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் முன்மொழிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



ஏற்கனவே அசோக் கெலாட் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று சிலர் கூறிவந்த நிலையில் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.



மேலும் தேசிய தலைவர் பதவியை ஏற்கவோ அல்லது ராஜஸ்தான் அரசியலில் இருந்து வெளியேறவோ அவர் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.



முன்னதாக நேற்று நடந்த ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்  ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல

Mar22

மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை

Jul07
May09

ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள

Dec20

பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்

Jun16

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம

Mar12

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல

Aug12

சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள

Feb12

சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி

May30

அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ

Oct15

எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்

Mar15

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை

Apr21

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்

Oct05

உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப