வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 ஆவது தினத்தை முன்னிட்டு இன்று மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றப்பட்டது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயற் திட்டத்தின் 50 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் காலை இடம்பெற்றது.
சிறுவர்கள் பொது மக்கள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் இணைந்து தமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும் பறக்கவிடப்பட்ட பட்டங்களில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும்இ நடமாடுவது எங்கள் உரிமை பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமைஇ ஒன்று கூடுவது எங்கள் உரிமை உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் கிராம மட்ட அமைப்பினர் விவசாய மீனவ சங்கங்க பிரதிநிதிகள் பெண்கள் அமைப்பினர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.