More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மஸ்கெலியாவில் தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்!
மஸ்கெலியாவில் தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்!
Sep 19
மஸ்கெலியாவில் தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்!

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



 தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா கிளன்டில்ட் தோட்டத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது.



அத்தோடு லக்ஷபான மற்றும் பிரவுன்ஸ்வீக் தோட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.



நாட்டில் உள்ள ஏனைய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் நாளாந்த சம்பளம் 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய்வரை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.



மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் மட்டும் 1000 ரூபாய்க்கு குறைவான சம்பளம் கொடுத்து அதிக லாபம் பெற்று அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை ஒடுக்குவதாகவும்இ தோட்டத் தொழிலாளர்கள்இ தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



மேலும்இ மூன்று வேளை உண்பவர்கள் தறபோது ஒரு வேளை மாத்திரமே உண்பதாகவும் குழந்தைகளுடன் வறுமையில் வாடுவதாகவும் இதனால் எதிர்காலத்தில் பட்டினியால் இறக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct09
Mar27

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட

Apr19

இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச

Sep21

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த

Feb25

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட

Jul26

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த

Mar19

11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்

Aug08

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி

Mar30

அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என

Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட

Oct18

நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத

Oct26

நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை

Mar08

ஒட்டுமொத்த இலங்கை சிங்கள பௌத்த மக்களையும் கண்கலங்க வை

Jan24

ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி