More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு
சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு
Sep 16
சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு

இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்களை நிறுவியுள்ளது.



இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 97சதவீதம் உயர்ந்துள்ளது என மெர்காம் இந்தியா ரிசர்ச் வெளியிட்ட 'மெர்காம் இந்தியா சோலார் ஓப்பன் அக்சஸ் மார்க்கெட் ரிப்போர்ட் 2022' என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 680 மெகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்கள் இணைக்கப்பட்டுள்ளது.



இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 223 சதவீதம் அதிகமாகும். கடந்த காலாண்டில் 210 மெகாவோல்ட் மட்டுமே நிறுவப்பட்டிருந்தது.



இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்கலன்கள் அனைத்தும் 'திறந்த அணுகல் மூலம் சூரிய மின்சக்தி' என்ற இலக்கை கொண்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்படுவதாகும்.



இத்திட்டமானதுஇ சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஏற்பாடாகும்.



இதில் உற்பத்தியாளர்கள் சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தத்தின் (பிபிஏ) அடிப்படையில் நுகர்வோருக்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுகின்றனர்.



அத்துடன்இ மின் உற்பத்தியாளர்களிடமிருந்துஇ திறந்த சந்தை மூலம் ஒப்பீட்டளவில் மலிவான மின்சாரத்தை நேரடியாக நுகர்வோர் வாங்குவதற்கு உதவுகிறது.



இந்த ஆண்டு இதுவரை திறந்த அணுகல் சந்தையில் நிறுவப்பட்ட சூரிய திறன் 6.5 ஜிகாவோல்ட்டிற்கு மேல் உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.



இந்த திறனில் முக்கால் பகுதி கர்நாடகாஇ மகாராஷ்டிராஇ தமிழ்நாடுஇ உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மையம் கொண்டுள்ளது.



இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த மாநிலங்கள் நாட்டின் மொத்த நிறுவல்களில் 91சதவீதத்தை உருவாக்கியுள்ளன.



அத்துடன்  கர்நாடகா இச்செயற்றிட்டத்தில் முன்னணியில் இருப்பதால் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.



இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அனைத்து நிறுவல்களில் 44 சதவீதமாகவும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த நிறுவல்களில் 38 சதவீதமாகவும் உள்ளது.



மேலும்இ திறந்த அணுகல் சூரிய மின்சக்தி திட்டங்களில் 2.8ஜிகாவோல்ட் திட்டங்கள் முன் கட்டுமான கட்டத்தில் உள்ளன எனவும் மேலும் தெரிவித்துள்ளது.



மெர்காம் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பிரியா சஞ்சய்இ 'பசுமை எரிசக்தி திறந்த அணுகல் விதிகள் நிறைய வாக்குறுதிகளைக் கொண்டுள்ளன. மேலும் அது இப்போது மாநிலங்களின் பேச்சில் நடக்க வேண்டும்.



திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.



திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க பொருட்களை வாங்குவது வணிகங்களின் இயக்கச் செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar23

பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத

Jul16

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள

Aug22

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற

May22

இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற

Aug29

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Aug29