புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு காலமானார்.
இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர், எழுத்தாளர், திறனாய்வாளராக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சியும் தெளிவும் பெற்றிருந்தார் கே.எஸ். சிவகுமாரன்.
அன்னாரின் இழப்பு தழிழ் உலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.