எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்திய தீருவோம் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் நிமால் புஞ்சி ஹேவா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்இ உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏற்கனவே ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா இதன்போது குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அடுத்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.