கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பயணிகள் குழு நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது.
சீனாவில் கொவிட்-19 தொற்று ஆரம்பமானதை அடுத்து இலங்கையில் வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் சுற்றுலா தொடர்பான விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகிறது.
அதனடிப்படையில் ஏனைய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததுடன், நேற்றைய தினம் முதலாவது சீன சுற்றுலா குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.