அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்ற தமிழர் ஒருவர் நேற்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சையது அகமது நேற்று சிட்னி மேற்கு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தி உள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து 2 பொலிஸார் அவரை நெருங்கி வந்தனர்.
அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அவுஸ்திரேலியாவின் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.