பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம்.
தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன.
மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச நகர்வுகளில் ரணிலுக்கு விசுவாசமாக செயற்பட்டாரோ, அதனையும் விட கோட்டாபய ராஜபக்ச மிலிந்த மொறகொட மீது அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டிருந்தார்.
அதாவது 2009 இல் போரை ஆயுதரீதியாக வெற்றிகொண்டது போன்று, அரசியல் ரீதியாக அதுவும் சர்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்ய மிலிந்த மொறொகொட, சுவிஸ்லாந்தில் தூதுவராகப் பதவி வகிக்கும் சி.ஏ.பிரேமச்சந்திர ஆகியோரை கோட்டாபய நம்பியது போன்று தற்போது ரணிலும் நம்புகிறார்.