ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு எப்படி இருக்கும் என்பதை ரஷ்ய பெண் ஜோதிடக்கலைஞர் ஒருவர் கணித்துள்ளார்.
ரஷ்ய ஜோதிடக் கலைஞரான Marina Vasilieva என்பவரே இது தொடர்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய 2023ஆம் ஆண்டு புடின் தனது தலைவிதியை சந்திக்கும் ஆண்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, ஏப்ரல், ஜூன் மற்றும் செப்டெம்பர் ஆகிய மாதங்கள் புடினுக்கு உகந்தவையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
இந்த மாதங்களின்போது முக்கியமான முடிவுகள் எடுப்பதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கவனமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியைப் பொருத்தவரை, அவருக்கு 2023 சாதகமான ஆண்டாக இருக்கும் என குறித்த ஜோதிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிற்கு உதவுவதற்காக மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் வருவார்கள் என்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் ஒரு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.