சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோட்டைக்கு நேற்று இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளனர்.
இதன்போது இக்குழுவில் அடங்கிய பிரதிநிதி ஒருவரே இவ்வாறு பட்டு வேட்டியுடன் வருகை தந்துள்ளார்.
கடந்த காலத்தில் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீன தூதர் உள்ளிட்ட குழுவினர் பட்டு வேட்டியுடன் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.