More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தருமபுரி மாவட்டங்களில் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தருமபுரி மாவட்டங்களில் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Dec 27
தருமபுரி மாவட்டங்களில் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும். பட்டா மாறுதலில் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி சேவை வழங்கப்பட வேண்டும்.



நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, உள்துறை, போக்குவரத்து ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற நிலுவையிலுள்ள சான்றிதழ்களை ஒருமாத காலத்திற்குள், தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் பட்டா மாறுதலில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சேவை வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறையாமல் இயக்கப்பட வேண்டும், குறைவாக பேருந்துகள் இயக்கப்பட்டால் காரணங்களை கண்டறிந்து உடனடியாக களைய வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத

Feb25

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை

Jan19

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம

Feb22

கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம

Jan22

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா

Mar08

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற

Jan26

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும்

Jun25

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப

Aug13

சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா

Sep06

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள

Mar04

‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர

Aug30