தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த முச்சக்கரவண்டி நடு வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸிப் பகுதி நோக்கி பயணித்தவேளை இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தந்தை முச்சக்கரவண்டியை செலுத்தியதுடன் தாயும் மகளும் உள்ளே இருந்துள்ளனர்.
சம்பவத்தின்போது மூவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த நுவரெலியா காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.