More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் ஏமாற்றம்..!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் ஏமாற்றம்..!
Oct 25
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் ஏமாற்றம்..!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய சம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் பதவியில் இருந்து விலகுவார் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.



அவுஸ்ரேலியாவில் நவம்பர் 30ஆம் திகதி தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே சிம்மன்ஸின் இறுதிப் பணியாகும்.



மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இரண்டாவது முறையாக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், கடந்த 2016ஆம் ஆண்டு அந்த அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.



பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது, அந்த காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி, மேம்பட்டிருந்தாலும், ரி-20 போட்டிகளில் ஏமாற்றம் அளித்திருந்தது.



அத்துடன், கிறிஸ் கெய்ல், லெண்டில் சிம்மன்ஸ், கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் போன்ற அனுபவமிக்க வீரர்களின் இருப்பு கடந்த ஆண்டு ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் பெரிதான தாக்கத்தை வெளிப்படுத்தவில்லை.



ஆகையால் புதுமுக வீரர்களின் வருகையுடன் இம்முறை ரி-20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.



இரண்டு முறை (2012மற்றும் 2016)ரி-20 உலகக் கிண்ணம் வென்ற ஒரே அணியான மேற்கிந்திய தீவுகள், இந்த முறை முதல் சுற்றில் ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளிடம் தோல்வியை தழுவி அதிர்ச்சியுடன் தொடரிலிருந்து வெளியேறியது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப

Mar06

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண

Aug23

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப

Jan10

ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர

Feb04

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க

May20

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்

Mar09

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ

Oct02

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப

Sep21

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்

Mar20

ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை

Feb05

இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,

Jan26

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம

Jul24

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ

Aug16

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி சே