More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பட்டாசு வெடித்ததால் காற்றுமாசு அதிகரிப்பு
பட்டாசு வெடித்ததால் காற்றுமாசு அதிகரிப்பு
Oct 25
பட்டாசு வெடித்ததால் காற்றுமாசு அதிகரிப்பு

டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில் காற்றுமாசு அதிகரித்துள்ளது.



டெல்லியில் காற்று மாசு தரக்குறியீட்டு எண் 323 என்ற அளவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.



உலக அளவில் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவிடவும் வகையில் 2007-ம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.



ஆசிய நாடுகளில் அதிக மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.



இதில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



இதன்படி உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை கொண்ட நாடுகளின் வரிசையில் கத்தாருக்கு அடுத்து இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.



சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தர குறியீடு அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலின்படி தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.



இதற்கு அடுத்து பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடம் பிடித்த டெல்லி உலக அளவில் தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது.



மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



எனினும் இந்த டாப் 10 பட்டியலில் தலைநகர் டெல்லி இடம் பெறவில்லை என உலக காற்று தர குறியீடு அமைப்பு தகவலை அடிப்படையாக வைத்து டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



டெல்லியில், வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வுகள், கடந்த ஆண்டு இதே நேரத்தில் 15 சதவீதம் என இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது 2 முதல் 3 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இருப்பினும் டெல்லியில் காற்றின் தரம் ஒட்டுமொத்த அளவில் இன்று 323 புள்ளிகளாக மிக மோசமாக உள்ளது என்று கூறியுள்ளனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct22

காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக

Oct25

டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்

Dec28

மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப

Aug16

 கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர

Jan04

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக

Jul04

சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர

Aug17

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்

Aug12

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு

Mar08