விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையான இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்க்கு பதிலாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்று ரிலீஸ் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த வாரத்தில் இருக்கும் வாரிசு படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.