More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தீபாவளி கொண்டாட கார்கில் சென்றார் பிரதமர் மோடி...!
தீபாவளி கொண்டாட கார்கில் சென்றார் பிரதமர் மோடி...!
Oct 24
தீபாவளி கொண்டாட கார்கில் சென்றார் பிரதமர் மோடி...!

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். 



லடாக், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 



மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 



இதனிடையே பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 



2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். 



2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். 



இந்நிலையில் பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். 



கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடுகிறார். இதற்காக பிரதமர் மோடி கார்கில் சென்றுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத

Aug13

சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா

Oct14

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ

Apr15

கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச

Apr19

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த

May07

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப

Jul14

தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்

Mar26

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந

Aug23

உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ

Apr30

 இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்

Jun25

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

Apr22

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க

Sep04

தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப

Mar27

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட

Feb22

 நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ