More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • பார்ப்பதற்கு மிகவும் சிறியது ஆனால் இதன் பயன்கள் பெரியதா...?
பார்ப்பதற்கு மிகவும் சிறியது ஆனால் இதன் பயன்கள் பெரியதா...?
Oct 23
பார்ப்பதற்கு மிகவும் சிறியது ஆனால் இதன் பயன்கள் பெரியதா...?

சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது.  மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும் தோட்டங்களில் வளர்வதை ஆனைச்சுண்டைகாய் அல்லது பால் சுண்டைகாய் என்றும் கூறுவார்கள். பார்ப்பதற்கு மிகவும் சிறிய அளவினில் காணப்படும் இந்த சுண்டைகாயில் ஏராளமான நன்மைகள் உள்ளது.



சுண்டைக்காய்க்கு கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி போன்ற பெயர்களும் உண்டு. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ கூட்டு செய்தோ சாப்பிடலாம்.  சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.



நன்கு காயவைத்த சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் போன்ரவை நீங்கும். சுண்டைக்காயை பருப்புடனும் சேர்த்தும் சமைக்கலாம் அல்லது வத்த குழம்பாகவும் செய்து சாப்பிடலாம்.



சுண்டைக்காயை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகளை போக்குவதோடு வயிற்றுப் புழுக்கள், குடற்புண்கள் ஆகியவற்றை வெளியேற்றும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டுமுறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் நல்லது.



சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி,  சுண்டைகாய் வற்றல் செய்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் தணியும். இந்த நோயினால் வரக்கூடிய உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல், கை, கால், நடுக்கம், மயக்கம் முதலியவற்றை நீக்கக்கூடிய சக்தி இதில் உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல

Jan20

நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு

Feb22

முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு

Mar11

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்

Mar23

சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க

Oct05

தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ

May04

வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம

Feb07

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்க

Mar22

இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொர

Feb07

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல

Jan11

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை

Mar05

நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய

Mar05

புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என

Feb11

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக