More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தயார் – சி.வி!
22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தயார் – சி.வி!
Oct 21
22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தயார் – சி.வி!

22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.



நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது என்றும் 22ஆவது திருத்தச் சட்டமூலம் முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.



22 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. என்பதோடு அமைச்சரவை நியமனம், அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டி்காட்டினார்.



மேலும் ஒருசிலரின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22 ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் 22 ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதல் படியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.



எனவே 22 ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர

Oct05

அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு

Mar08

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை  10 ரூ

Jan20


 இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு

Jan28

இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை

Jul31

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி

Sep16

முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுன

Aug27

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு

Mar30

இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே

Sep07

இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா

Jun06

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர

Mar26

இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)

Jan27

இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்ற

Sep15

எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம

May24

கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்