More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர்!
கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர்!
Oct 21
கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர்!

நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.



ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவினால் நடத்தப்பட்ட நேர்காணலிலேயே நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.



வரி திருத்தங்கள் வட்டி விகித உயர்வு போன்றவை இவ்வாறு கடுமையாக எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.



இதன்போது வரி சீர்திருத்தம் மற்றும் ஐஆகு செயன்முறை மூலம், எதிர்காலத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து முன்னேறுவதற்கு எங்களுக்கு ஏதாவது வழி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் கேள்வியெழுப்பினார்.



இதற்கு பதிலளித்த ஆளுநர், கடந்த காலத்தில் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை இருந்தது என்றும் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார்.



அது வேலைத்திட்டத்தின் மூலம் தலைகீழாக மாறிவிட்டது என்றும் வரி மற்றும் நிதிக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



மேலும் வரிக் கொள்கையை ஓராண்டுக்கு அமுல்படுத்தினால், நாம் எதிர்பார்த்ததை விட வரி வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



அதிக வருமானம் உள்ளவர்கள் அதிகம் பங்களிப்பார்கள் என்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதிக வருமானம் உள்ளவர்கள் பங்களித்தால் அனைவருக்கும் வரிச்சலுகை அளிக்கலாம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர

Feb08

வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில

Sep20

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்

Mar30

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின

May02

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆக

Feb01

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்

Jan24

பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Feb05

பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந

Sep20

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப

Apr07

திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்

Apr08

சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்க

Mar12

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை

Oct02

அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா

Mar07

நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு