உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்தாம் மற்றும் ஆறாம் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஐந்தாவது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் ஆறாவது போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இரு அணிகளும் முன்னதாக ஒவ்வொரு போட்டியில் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளன. அதே நேரம் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டியே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.