More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியாவில் தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!
வவுனியாவில் தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!
Oct 17
வவுனியாவில் தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.



குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பிரதேச செயலக வாயிலின் முன்பாக இன்று காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.



வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் கடந்த  காலை இடம்பெற்ற சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பான கூட்டத்தின் போது அங்கு சென்ற பொதுமகனொருவர் தனது சமூர்த்தி முத்திரை வெட்டப்பட்டமை தொடர்பில் குறித்த பிரிவு சமூர்த்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சமுர்த்தி உத்தியாகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



இச் சம்பவத்தில் காயமடைந்த கந்தபுரம் பிரிவு சமூர்த்தி உத்தியோகத்தர் சிவஞானசிங்கம் கபிலன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட பொதுமகனை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நீதியான தீர்வு கோரியும் வவுனியா பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கம் மற்றும் பிரதேச செயலகத்தினர் இணைந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை பணிப்புறக்கணிப்பிலும் பிரதேச செயலக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.



போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தவர்கள் எமது உத்தியோகத்தர்களை நேர்மையாகவும் சரியாகவும் கடமையாற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் அரச அதிகாரிகளின் மீதான தாக்குதலை வன்மையான கண்டிக்கின்றோம் அரசாங்க சுற்றுநிருபத்திற்கினங்க பணிபுரிவதற்கு இடமளியுங்கள் போன்ற வசனங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில

Jan19

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப

Feb12

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக

Mar05

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்

Jan26

கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப

Jun30

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க

Oct04

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி

Jun04

பயன்படுத்தப்படாத நிலங்ககளில் பயிரிடுவதற்கான வேலைத்

Jun21

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத

Oct18

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்

Sep29

Aflatoxin  அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், 

Dec17

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட

Sep13

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற

May16

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த

Sep21

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு