More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் எதிரொலிக்குமா? நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் எதிரொலிக்குமா?  நாளை கூடுகிறது  தமிழக சட்டசபை
Oct 16
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் எதிரொலிக்குமா? நாளை கூடுகிறது தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது. அ.தி.மு.கவின் ஒற்றை தலைமை விவகாரம் சட்டசபையிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகின்றது. 



சென்னை தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். 



கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். இதன் பிறகு 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். 



இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அனேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



நாளை துவங்கும் சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சட்டசபையை புறக்கணிக்க கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. காரணம் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது சட்டசபையிலும் எதிரொலிக்க உள்ளது. 



அ.தி.மு.க.வில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டதோடு இதுகுறித்து சபாநாயகருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb14

பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந

Dec31

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்

Sep02

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக

Mar02

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர

Sep18

தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்

Dec22

தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங

Aug18

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி

Mar30

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி

Mar08

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ

Mar08