56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பொலிஸ் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்று இருந்தது.
இதேவேளை ஆண் பெண் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பு, விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் நிகழ்வுகள், மோப்ப நாய்களின் சாகசங்கள், வர்ண வானவேடிக்கை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, கந்தளாய், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாண முப்படை உயரதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.