More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ஆசியக் கிண்ண தொடரில் ஏழாவது முறையாக இந்தியா சம்பியன்!
ஆசியக் கிண்ண  தொடரில் ஏழாவது முறையாக இந்தியா சம்பியன்!
Oct 15
ஆசியக் கிண்ண தொடரில் ஏழாவது முறையாக இந்தியா சம்பியன்!

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி, ஏழாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.



அதேவேளை ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இலங்கை அணி தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டது.



பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ரனவீர ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களையும் ரனசிங்ஹ 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சில் ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளையும் கயக்வாட் மற்றும் ரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 66 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய மகளிர் அணி 8.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.



இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஸ்மிரிதி மந்தனா 51 ஆட்டமிழக்காது ஓட்டங்களையும் ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காது 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் ரனவீர மற்றும் தில்ஹாரி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகியாக ரோனுகா சிங்கும் தொடரின் நாயகியாக தீப்தி சர்மா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct20

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட

Jan25

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப

Feb05

இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி

Aug05

ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க

Feb14

தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி

Feb27

இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ

Jan25

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ

Oct09

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Feb10

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க

May18

சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச

Mar07

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா