ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுகளை உட்கொள்வதாக ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலைகள் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக பாடசாலை உணவு வழங்குநர்களின் வர்த்தக அமைப்பான எல்.எ.சி.ஏ. தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக 28 சதவீத பாடசாலை உணவு வழங்குபவர்கள் இப்போது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துகின்றனர்.
அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரித்தானியரிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிக்கு மாறுவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.
லண்டனின் மிகவும் பின்தங்கிய பெருநகரங்களில் ஒன்றான நியூஹாமில் உள்ள டெர்சிங்ஹாம் பாடசாலை இலையுதிர்கால அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு புதிய மெனுவைத் தொடங்க உள்ளது.
'இந்த ஆண்டு உணவின் விலை உயர்ந்துள்ளது. சில பொருட்கள் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. ஒவ்வொரு நாளும் பாடசாலை உணவு வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் உணவை வழங்குவதில் இது மிகப்பெரிய சவாலாக உள்ளது' என வழங்குனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.