More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சோள விதைகளை விடுவிப்பது குறித்து பிரதமர் அறிவுறுத்து!
சோள விதைகளை விடுவிப்பது குறித்து பிரதமர் அறிவுறுத்து!
Oct 13
சோள விதைகளை விடுவிப்பது குறித்து பிரதமர் அறிவுறுத்து!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகளை விவசாயிகளுக்கு விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உடனடியாக தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டம் இன்று  பிரதமர் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.



17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவால்கள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.



தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுகாதாரத் துறை மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, வறுமைப் பிரச்சினையை மீளாய்வு செய்தல், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை உன்னிப்பாகக் கவனித்தல், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியை மேம்படுத்துதல், பருவநிலை மாற்றத்தின் சவால்களை முறியடித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகளில் அஃப்லடோக்சின் கலந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவதனால் விதைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.



இந்நிலையில்இ இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

Feb11

பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்

Mar19

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண

Sep06

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம

Sep25

திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்

Mar18

அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ

Feb02

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்

Sep19

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர

Jan25

இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம்  செய்வதற்கு எ

Jul21

இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று

Jan26

விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள

Oct04

உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி

Feb20

காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற

Sep16

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம