தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி நேற்று உயிரிழந்துள்ளார் என தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மில்லரின் மகள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், அவரின் நெருங்கிய நண்பரின் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
டேவிட் மில்லரின் நெருங்கிய நண்பரின் மகள் அனே என்பவரே உயிரிழந்துள்ளார்.
மில்லர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது பிரிவு குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"உன்னை மிகவும் இழக்கப் போகிறேன். நான் அறிந்த மிகப்பெரிய இதயம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள். உங்களுடன் ஒரு பயணத்தில் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் "என்று மில்லர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.