More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • படையினரின் சுற்றிவளைப்பு! பிரதான போதைப்பொருள் முகவர்கள் கைது!...
படையினரின் சுற்றிவளைப்பு! பிரதான போதைப்பொருள் முகவர்கள் கைது!...
Oct 09
படையினரின் சுற்றிவளைப்பு! பிரதான போதைப்பொருள் முகவர்கள் கைது!...

போதைப்பொருளை கடத்தி சென்ற 3 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.



அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (07.10.2022) அதிகாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - கல்முனை பிரதான வீதி மல்வத்தை பிள்ளையார் கோவில் அருகில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவ்வாறு கைதான நபர்கள் அம்பாறை நகர் பகுதியை சேர்ந்த 33, 37, 38 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த கருப்பு நிற கொரோல்லா கார் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் 06 கிராம் 840 மில்லிகிராம், தொகுதி பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



கைது செய்யப்பட்டவர்கள் சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (7.10.2022) அதிகாலை மற்றுமொரு நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.



கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மதிரஸா வீதியில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இவ்வாறு கைதான நபர் கல்முனைகுடி பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 7 கிராம் 870 மில்லி கிராம் உள்ளிட்ட சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



 



பிரதான முகவர்கள்



கைது செய்யப்பட்ட நபர், சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு தரப்பினரும் குறித்த பிராந்தியத்தில் போதைப்பொருள் விற்பனையின் பிரதான முகவர்களாக செயற்பட்டு வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr10

உயர்ந்த  கட்டிடங்களுக்கு  மாறாக    ரம்மியமான  ச

May26

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க

Oct01

நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

May18

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப

Jul11

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Feb08

2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத

Oct15

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்

May25

 பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்

Dec19

பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத

Jan27

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள

Oct01

அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த

Mar30

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ

Feb02

ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள

May20

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள