குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
உப குழு நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள், மற்றும் தொழில்முனைவோர் கொள்கைகள், தொடர்பான துறைகளில் நிபுணர்களையும் உப குழுவிற்கு அழைத்து நவீனமயமாக்கலுக்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
குறுகிய கால பிரேரணைகளை ஒரு மாத காலத்திலும், நடுத்தர கால பிரேரணைகளை இரண்டு மாதங்களுக்குள்ளும், நீண்ட கால பிரேரணைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், யோசனைகளைகளை சமர்ப்பிக்க உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.