வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண்டு முக்கிய ஐளுஐளு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவின் வடகிழக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ISIS தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு-ஹும் அல்-உமாவி உட்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.