More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது!
துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது!
Oct 07
துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக  துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.



சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டா க்களும் மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.



கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.



சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



இதேவேளை சந்தேக நபர் மேற்படி துப்பாக்கியை எங்கிருந்து எடுத்து வந்தார்? என்ற கேள்விக்கு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun25

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா

Mar27

இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்

May01

கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள

Sep23

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்

Jan29

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின

May18

நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.

Mar15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல

Jan13

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை

Mar26

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு

Feb27

மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்

May27

ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த

May03

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்

Nov23

யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை

Jun29

எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா

Sep27

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு